புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, June 25, 2009

இல்லாத முகவரிகள் - 4

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, ஆண்டாள் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தோம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோயில் கோபுரம், இந்தக் கோயில் கோபுரம்தான். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரம் என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்கு உள்ளே செல்லும் திட்டம் எல்லாம் இல்லை. கோபுரத்தைப் பார்க்கவேண்டும், மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். அவ்வளவுதான். காவலரிடம் கோபுரத்தைப் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டோம். திருச்சியில் இருந்து வந்திருப்பதாகச் சொன்ன பிறகு, பரிதாபப்பட்டு 'இங்கு எடுக்கக் கூடாது. கொஞ்ச தூரம் தள்ளிப்போய் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். எங்கேயும் சரியான கோணம் அமையாமல், பக்கத்துத் தெருவில் போய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் பார்க்காமலேயே பயணத்தைத் தொடர்ந்தோம்.













பயணத்தின் அடுத்த கட்டம் தான் மொத்தப் பயணத்தின் சிறப்பம்சமே! ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு பேருந்து பிடித்து போய் இறங்கியபோது பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டி இருந்தது. மதிய உணவை முடித்து, அங்கிருந்து நாங்கள் பயணம் செய்யத் தொடங்கிய இலக்கு, 'எட்டையபுரம்'. பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றி ஏற்கனவே என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். ஒரு மாதிரியான பரவச நிலையில் எழுதப்பட்ட பதிவு அது. மீண்டும் அதுபோல் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அப்பதிவின் தொடுப்பை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...

2 comments:

நந்தாகுமாரன் said...

சற்று இறுக்கமான நடை போலத் தோன்றினாலும் இந்த பயணக் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது ... அவ்வப்போது படிப்பேன் ... முழு தொகுதியாக வரும் போது இடைவேளை இல்லாமல் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன் ...

ஆ.சுதா said...

ஏற்கனவே கொஞ்சம் படித்திருக்கின்றேன். மீண்டும்!