புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, July 28, 2009

நனைப்பதை நனைப்பவன்

யார்யாரையோ மெழுகிய காற்று
என்னையும் மெழுகிப் போகிறது

யார்யாரையோ நனைத்த அலை
என்னையும் நனைத்துப் போகிறது

யார்யார் மீதோ படிந்த உப்பு
என் மீதும் கரிக்கிறது

யார் யார் கண்களிலோ விழுந்து
நினைவுக்குள் சிக்குண்ட துளி
எனக்குள்ளும் விழுந்து
தொலைந்து போகிறது

இந்த வரிகளைப்
பாடிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால் சொல்லுங்கள்
அந்த யாரோவில்
நானும் ஒருவன் என்று

-கடலை நனைப்பவன்

8 comments:

யாத்ரா said...

மிகவும் ரசித்தேன் சேரல்.

மண்குதிரை said...

rasiththeen

Vidhoosh said...

ஏதோ ஏற்கனவே படித்த உணர்வு.

அழகான கவிதை.

--வித்யா

நேசமித்ரன் said...

உங்கள் கவிதையின் தளம் மெல்ல மாற்றம் அடைந்து வருகிறது
வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

உப்புக் காற்றின் பிசுபிசுப்பு படிப்பவனையும் ஒற்றிக்கொள்ளும் வரிகள். அருமை சேரல்

ஆதவா said...

பிரமாதம் சேரல்.. உங்கள் படிந்த வரிகள் எனக்கு விருப்பமானவை!! (மகுடேசுவரன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கூறி பெருமை கொள்கிறேன்!)

சத்ரியன் said...

//இந்த வரிகளைப்
பாடிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால் சொல்லுங்கள்
அந்த யாரோவில்
நானும் ஒருவன் என்று//

ஏன் யாரோ யாரையோ ?....எல்லோரையும் ஒருசேர நனைக்கின்றீர்கள் சேரல். உங்கள் கவிதையால்...!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்